உங்கள் ஆன்ட்ராய்டு போனை ஹேக்கர்களிடமிருந்து பாதுகாத்து கொள்வது எப்படி???/?
உலகில் கோடிக்கணக்கான நபர்கள் ஆண்ட்ராய்டு போன்களையே பயன்படுத்துவதால் ஹேக்கர்களின் குறி அவர்களை நோக்கியே உள்ளது. இதனால் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பயனாளிகள் சில குறிப்பிட்ட பாதுகாப்பு அம்சங்களை பின்பற்ற வேண்டியது அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. தற்போதைய நவீன டெக்னாலஜி காரணமாக உங்கள் ஸ்மார்ட்போனை ஹேக்கர்கள் ஹேக் செய்வது என்பது மிக எளிதான ஒன்று. ஹேக்கர்களை உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது. எனவே உங்களுடைய அன்பான ஸ்மார்ட்போனை நீங்கள் ஹேக்கர்களிடம் இருந்து எப்படி பாதுகாத்து வைத்து கொள்வது என்பதை தெரிந்தே ஆகவேண்டும்.
உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஹேக்கர்களிடம் சிக்கினால் என்ன ஆகும்? ஹேக்கர்கள் உங்களின் என்னென்ன விஷயங்களை தெரிந்து கொள்வார்கள்? உங்களுடைய தனிப்பட்ட டேட்டாக்கள் வங்கி கணக்குகள் விபரங்கள் மற்றும் வங்கி கணக்கில் நுழையும் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டுகள் உங்களுடைய பர்சனல் டேட்டாக்களை ஹேக்கர்கள் தெரிந்து கொள்வதன் மூலம் அதை வைத்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு உங்களை சிக்கலில் ஆழ்த்தலாம்.
அதுமட்டுமின்றி உங்களுடைய அன்றாட நடவடிக்கைகளையும் அவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அமையும். இருப்பினும் கவலை வேண்டாம் உங்களுடைய ஸ்மார்ட்போனை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
ஆண்ட்ராய்டு போனை ஹேக்கர் புரூப் ஆக மாற்றுவது எப்படி?
எந்த பாஸ்வேர்டையும் சேவ் செய்ய வேண்டாம்: பெரும்பாலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளிகள் மறதி மற்றும் நேரத்தை சேமிக்கும் பொருட்டு பாஸ்வேர்டை சேமித்து வைக்கும் வழக்கத்தை உடையவர்களாக உள்ளனர். இது ஹேக்கர்களுக்கு மிக வசதியான ஒன்றாக கருதப்படுகிறது. முக்கியமில்லாத அம்சங்களின் பாஸ்வேர்டுகளை சேமித்தால் கூட பரவாயில்லை ஆனால் வங்கி கணக்குகள் உள்ளிட்ட முக்கியமானவற்றின் பாஸ்வேர்டுகளை கண்டிப்பாக சேமித்து வைக்க வேண்டாம். அது மிகவும் ஆபத்தானதாக அமையும்
ஆண்ட்ராய்டு அளித்துள்ள செக்யூரிட்டியை பயன்படுத்துங்கள்:
ஒவ்வொரு ஆண்ட்ராய்டு போனிலும் ஒரு செக்யூரிட்டி அம்சங்கள் தரப்பட்டிருக்கும். பின் நம்பர், பாஸ்வேர்டு, பேட்டர்ன் மற்றும் பிங்கர் பிரிண்ட் சென்சார் ஆகியவை இந்த செக்யூரிட்டி அம்சாங்கள் ஆகும். இந்த செக்யூரிட்டி சிஸ்டத்தை பயன்படுத்துவது ஒரு கூடுதல் பாதுகாப்பு என்பதை மறக்க வேண்டாம். மேலும் இந்த பாஸ்வேர்டு, ஹேக்கர்கள் யூகிக்காத வகையில் கொஞ்சம் கடினமாக்கி கொள்வது இன்னும் கூடுதல் பாதுகாப்பாக அமையும்
தேர்டு பார்ட்டி ஆப்ஸ்களை தவிர்த்துவிடுங்கள்:
கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து மட்டுமே செயலிகளை டவுன்லோடு செய்யுங்கள். மூன்றாவது பார்ட்டி என்று கூறப்படும் தேர்டு பார்ட்டி செயலிகளை கண்டிப்பாக டவுன்லோடு செய்ய வேண்டாம். குறிப்பாக பிரிமியம் செயலிகளை இலவசமான தருகிறோம் என்று கூறப்படும் விளம்பரங்களை நம்பி அந்த செயலிகளை டவுன்லோடு செய்ய வேண்டாம். அந்த இலவசத்திற்கு பின்னால் என்ன அபாயம் உள்ளது என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியாது. மேலும் தேர்டு பார்ட்டி செயலிகளில் வைரஸ் இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதால் இவ்வகை செயலிகளை மொத்தமாக தவிர்ப்பது மிகவும் நல்லது.
செயலிகளை ரெவியூ செய்யுங்கள்:
நீங்கள் டவுன்லோடு செய்த செயலிகள் அப்டேட் ஆகும் போது கண்ணை மூடிக்கொண்டு அப்டேட் செய்ய வேண்டாம். அதில் உள்ள கண்டிஷன்களை படித்து பாருங்கள். மேலும் ஒவ்வொரு செயலியையும் அப்டேட் செய்யும்போது அதற்கு ரெவ்யூ அளியுங்கள். மேலும் சந்தேகப்படும்படி ஏதாவது செயலிகள் இருந்தால் அந்த செயலிகளை உடனே அன் இன்ஸ்டால் செய்துவிடுங்கள்.
டேட்டா என்க்ரிப்ஷனை பயன்படுத்துங்கள்
டேட்டா என்கிரிப்ஷன் என்பது ஸ்மார்ட்போன்களுக்கு கிடைத்த கூடுதலான ஒரு பாதுகாப்பு அம்சம் ஆகும். இதனை உங்கள் ஸ்மார்ட்போனில் எனேபிள் செய்து வைத்து கொள்ளுங்கள். இது கூடுதலான பாதுகாப்பை அளிக்கும். மேலும் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் பாஸ்கீ பயன்படுத்தி கொள்ளுங்கள்
சாப்ட்வேர் அப்டேட்டில் உள்ளதா? உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள சாப்ட்வேரை அதன் தயாரிப்பாளர்கள் அப்டேட் செய்திருந்தால் உடனே அதனை அப்டேட் செய்து கொள்ளுங்கள். அப்டேட்டில் உள்ள புதிய அம்சங்கள் கூடுதல் பாதுகாப்பை அளிப்பது மட்டுமின்றி ஸ்மார்ட்போனை முடக்கும் பக்ஸ்களை நீக்கிவிடும், மேலும் புதிய அப்டேட்டில் புதிய வசதிகளும் கிடைகும்.
எனவே சாப்ட்வேர்களை தொடர்ந்து அப்டேட் செய்து கொள்வதில் கவனம் தேவை மேற்கண்ட அனைத்து வழிகளையும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் பயனாளிகள் கடைபிடித்து வந்தால் உங்களை ஹேக்கர்கள் நெருங்குவது அவ்வளவு சுலபம் இல்லை. கடைசியாக இன்னும் ஒரு விஷயம். தேவையில்லாத இணையதளங்களை போன் மூலம் ஓப்பன் செய்ய வேண்டாம்
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க. இதுபோன்ற செய்திகளை தொடர்ந்து பெற கீழேயுள்ள மஞ்சள் நிற FOLLOW பட்டனை அழுத்துங்கள். நன்றி..
Comments
Post a Comment