வெண்டைகாய் ஊரவைத்த இவ்வளவு நன்மைகளா????

வெண்டைக்காய் மிகவும் ஆரோக்கியமான ஓர் காய்கறி என்பது தெரியும். பலரும் அந்த வெண்டைக்காயை வேக வைத்து, பச்சையாக சாப்பிடுவார்கள். ஆனால் இந்த வெண்டைக்காயை திரவ வடிவில் உட்கொண்டால், அதனால் இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா?
இரவில் படுக்கும் முன், ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காய் துண்டுகளை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைப் பருக வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், அதனால் கிடைக்கும் நன்மைகள் அதிகம்.

1. நீரிழிவு நோயாளிகள் வெண்டைக்காய் நீரை தினமும் பருகி வருவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவை நீர்ச்சத்து திரவ இழப்பை தடுத்து உடலை குளுமையாக வைக்கிறது.

2. வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய் நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.

3. வெண்டைக்காய் நீரைப் பருகுவதால் எலும்புகள் வலிமையடைந்து, ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை வருவது தடுக்கப்படும். ஆகவே உங்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க நினைத்தால், வெண்டைக்காய் நீரை தினமும் குடித்து வாருங்கள்.

4. சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் வெண்டைக்காய் நீரைப் பருகுவதால், ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளில் அபாயம் குறைவதாக பல ஆய்வுகள் கூறுகிறது.

5. வெண்டைக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றம் வைட்டமின் சி போன்றவை உள்ளது. ஆகவே இந்த நீரைப் பருகுவதன் மூலம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, காய்ச்சல், சளி போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும். நோய் எதிர்ப்பாற்றல் அதிகமுள்ள வெண்டைக்காய் சிறந்த உடல்நல ஊக்கி என்றே சொல்லாம்.

6. வெண்டைக்காய் நீரை ஒருவர் தினமும் பருகி வந்தால், கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும். இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது.

7. வெண்டைக்காயில் உள்ள கரையாத நார்ச்சத்துக்கள், குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். எப்படியெனில் இந்த கரையாத நார்ச்சத்துக்கள் பெருங்குடல் பாதையை சுத்தம் செய்து, குடல் புற்றுநோயைத் தடுக்கும்.

Comments

Popular posts from this blog

Who celebrate birthday party with cake you should study and watch the video

தினமும் காலை மாலை என இருவேளையும் டீ, காபி குடிக்கும் நபரா நீங்கள்? கண்டிப்பாக இதை படிக்கவும்....

Impact of Redmi Note 5 Pro: Now you can buy Xiaomi Mi A1 at only Rs 3,000