நாம் நீண்ட காலம் வாழ்வதற்கு முதன்மையாக செய்ய வேண்டியது

நாம் நீண்ட காலம் வாழ்வதற்கு முதன்மையாக செய்ய வேண்டியது உடல் ஆரோக்கியத்தை பேணிக் காப்பது தான்.

அதன்படி, உடலை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் நீண்ட ஆயுளை பெறலாம் என்பது குறித்து இங்கு காண்போம்.

இயற்கை பானங்கள்

கோதுமை புல் பானம், இஞ்சி பானம் மற்றும் ஆப்பிள் சிடார் வினிகர் போன்ற பானங்களில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இவற்றை அருந்தி வந்தால் உடல் ஆரோக்கியத்துடன், புத்துணர்ச்சியும் பெறும்.

அதேபோல் களிமண் ஒரு புரோபயோடிக் ஆகும். இதனை பானம் செய்து அருந்தினால், குடலில் உள்ள தீய பாக்டீரியாக்களை அழிக்கும். இதன்மூலம், வயிறு முதிர்ச்சி தடுக்கப்படும்.

மூளை சலவை

எல்லை நரம்பு சம்பந்தமான நோய்களும், நமது உடலில் உள்ள செல்களில் தேங்கியுள்ள கழிவுப் பொருட்களால் உண்டாகின்றன. எனவே, மூளையை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியம்.

அதற்கு நல்ல ஆழ்ந்த தூக்கம் போதுமானது. இதன்மூலம், மூளை புத்துணர்ச்சி பெற்று உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

எனவே, மூளையில் உள்ள தேவையற்ற கழிவுச் சிந்தனைகளால் தூக்கம் வராமல் தவிப்பதால் உடல் நலம் பாதிக்கப்படுவது, ஆழ்ந்த தூக்கத்தின் மூலம் தடுக்கப்படும். நல்ல தூக்கம் நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.

Neti Pot

மூக்கை சுத்தப்படுத்த Neti Pot முறை உதவுகிறது. இது பார்ப்பதற்கு சிறிய பானை வடிவில் கெட்டில் போன்று இருக்கும். இதில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் தலையை சாய்த்து மூக்கின் ஒரு துவாரத்தின் வழியாக ஊற்றும் போது, அது மறு துவாரத்தின் வழியாக வெளியேறும். இந்த முறை மூலமாக மூக்கு சுத்தமாகுதல், சைனஸ் பிரச்சனைகள், சளி பிடிக்காமல் இருத்தல், மூச்சுக்குழல் தொற்று போன்றவை குணமாகும்.

மேலும், இதன்மூலம் நோய் தொற்றும் குறைந்து உடம்பு ஆரோக்கியமாக இருக்கும். நீண்ட ஆயுளும் பெற முடியும்.

தூசியில் விளையாடுதல்

தூசிக்குள் விளையாடும் போது நமது உடலில் நோயெதிர்ப்பு மண்டலம் தூண்டப்படும். இதற்கு காரணம் அந்த தூசிகளில் உள்ள பாக்டீரியா, வைரஸ் மற்றும் நுண்ணுயிர் கிருமிகள் உடலை தாக்கும்போது தானாகவே நமது நோயெதிர்ப்பு மண்டலம் போரிட துவங்கிவிடும்.

மேலும், நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்பதால் இயற்கையோடு நேரம் செலவிட்டால் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ முடியும்.

புல்வெளியில் நடத்தல்

வெறும் காலில் புல்வெளியில் அல்லது வெளியில் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதனால் பாதங்கள் நிலத்தில் உள்ள எலக்ட்ரான்களை ஈர்த்து மன அழுத்தத்தை குறைக்கும்.

அத்துடன் உடலில் வலியில்லாமல் நிம்மதியான உறக்கத்தை பெற முடியும். எனவே, வெறும் காலில் புல்வெளியில் நடந்தால் நமது ஆயுள் நீளும்.

பாசிகள்

பூமியிலேயே மிகச் சிறந்த உணவு பாசிகள் தான். இவற்றில் 40க்கும் மேற்பட்ட விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. மேலும், பாசிகளில் அமினோ அமிலங்கள், ஆண்டி ஆக்ஸிடண்ட்கள், குளோரோபைல் போன்றவையும் உள்ளன.

எனவே இவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது என்பதால், நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ இவை வழி வகுக்கும்.

நகம் கடித்தல்

நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நீண்ட காலம் வாழ முடியும். நகத்தில் உள்ள கிருமிகள் அதனை கடிக்கும் போது நேரடியாக உடலுக்குள் செல்லும் போது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் மேம்படுகிறது.

எனவே, அடிக்கடி உங்கள் கைகளை சுத்தம் செய்வதும் நல்ல பாக்டீரியாக்களை அழித்து விடும். ஆனால், எப்பொழுதும் தூசிக்குள் விளையாடி விட்டு அடிக்கடி அதிகமாக நகம் கடிக்கக் கூடாது.

குட்டி தூக்கம்

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, 18 முதல் 26 நிமிடங்கள் வரையிலான குட்டி தூக்கம் அவசியம். இதன்மூலம், மூளை சுறுசுறுப்பாகி, சிந்தனை செயல்பாட்டை அதிகரிக்கும். மேலும், இது உற்சாகமாக பணிபுரிய தூண்டும்.

எலுமிச்சை நீர்

உணவு உட்கொள்ளும் முன்னர் ஒரு தம்ளர் வெதுவெதுப்பான நீரில், எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் கல்லீரலில் ஏற்படும் தொற்று அழற்சி குறைந்து உடல் ஆரோக்கியம் பெறும்.

இவற்றை கடைபிடித்தால் நூறு வயது வரை ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.

Comments

Popular posts from this blog

Who celebrate birthday party with cake you should study and watch the video

18 ways to earn money in online with android mobile

A Stating businesses and it's necessary