பேரிச்சம் பழத்தில் உள்ள 5 நன்மைகள்
பேரிச்சம் பழம் ஆரோக்கியமான உணவுகளில் தவிர்க்க முடியாத ஒரு உணவு.
பேரிச்சம் பழத்தில் உள்ள இரும்பு சத்துக்கள் தான் பேரிச்சம் பழத்தின் தனி சிறப்பு. இரத்த சோகை ஏற்படாமல் தடுக்க பேரிச்சம் பழத்தை விட வேறொன்றும் இல்லை.
வயிற்றுப்போக்கு குணமாக பேரிச்சம் பழம் உதவுகிறது:
பேரிச்சம் பழத்தில் உள்ள பொட்டாசியம் வயிற்றுப்போக்கு ஏற்படுவதை தடுக்கிறது. இனி எப்போதாவது வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் இரண்டு பேரிச்சம் பழம் சாப்பிடுங்கள் அல்லது வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு போட்டு குடிக்கலாம். நீர் பருகிய பிறகு பேரிச்சம் பழம் சாப்பிடுங்கள்.
பேரிச்சம் பழம் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும்:
பேரிச்சம் பழம் இரத்தத்தை சுத்திகரித்து இரத்ததில் உள்ள கொழுப்புகளை நீக்கி கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும். பேரிச்சம் பழம் எல்.டி.எல் ( கெட்ட கொழுப்புகள் ) குறைக்க உதவுகிறது. பேரிச்சம் பழத்தில் உள்ள பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. 5 - 6 பேரிச்சம் பழத்தில் 80 மில்லி கிராம் மெக்னீசியம் நிறைந்துள்ளது. மெக்னீசியம் இரத்த ஓட்டம் அதிகரிக்க உதவுகிறது.
இரத்த சோகையை தடுக்கிறது:
பேரிச்சம் பழத்தில் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. பெரும்பாலான கர்ப்பிணி பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படுகிறது. அவ்வாறு இரத்த சோகை ஏற்படாமல் இருக்க தினசரி 2 பேரிச்சம் பழம் சாப்பிடுங்கள்.
பக்க வாதம் ஏற்படுவதை தடுக்கிறது:
பேரிச்சம் பழத்தில் உள்ள பொட்டாசியம் நரம்பு மண்டலத்தை சரி செய்து பக்க வாதம் ஏற்படுவதை தடுக்கிறது. 400 மில்லி கிராம் பொட்டாசியம் பக்க வாதத்தை தடுக்க போதுமானது.
இதய ஆரோக்கியம்:
இரவில் பேரிச்சம் பழத்தை நீரில் ஊற வைத்து காலையில் எழுந்ததும் சாப்பிடுவதால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. இதய கோளாறுகள் ஏற்படாமல் தடுக்க இந்த முறையை தினசரி பின்பற்றவும்.
எடை குறைய உதவுகிறது:
பேரிச்சம் பழத்தில் 0 கொலஸ்ட்ரால் இருப்பதால் உடல் எடை குறைய உதவுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் பேரிச்சம் பழம் சாப்பிட உடல் எடையை பராமரிக்க முடியும்.
Comments
Post a Comment