ஆன்லைன் வேலைகள்

ஆன்லைன் வேலைகள் (Online Jobs)
ஆன்லைன் வேலைகள் (Online Jobs) என்பதை இணையத்தில் மற்றவர்களுக்காக வேலை செய்யும் முறை என்றும் சொல்லலாம். இம்முறை என்பது அலுவலகத்திற்க்கு செல்லாமல் மற்றபடி அலுவலக வேலைகளை போன்றதே, இதில் உங்கள் திறமைகளுக்கேற்ப, நீங்கள் அறிந்து வைத்திருக்கும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப, வேலைகளை தரும் நிறுவனங்கள் அல்லது தனி நபர்களிடமிருந்து வேலைகளை பெற்று அதை தகுந்த முறையில் செய்து பணம் ஈட்டுவது. இதை நீங்கள் முறைபடுத்துவதன் மூலம் இதனை உங்களின் தொழிலாகவும் ஆக்க முடியும். இந்த வகையில் நீங்கள் செய்யும் வேலைகளின் திறன் மற்றும் வேலை செய்யும் நேரம் போன்றவற்றை முறையிட்டு அதன் அடிப்படையில் உடனுக்குடன் அல்லது குறிப்பிட்ட காலத்திற்க்குள் அதற்கான வருமானத்தை பெறலாம்.
ஆன்லைன் பிஸினஸ் (Online Business)
ஆன்லைன் பிஸினஸ் என்பது, மற்ற பிஸினஸ் போலவே தான், எப்படி ஒரு தொழிலில் நீங்கள் செய்யும் நேரத்தை பொருத்து அதன் வருமானத்தை தீர்மானிக்க முடியாதோ அதை போலவே இதில் நேரம் மட்டும் முக்கியமானதல்ல, நீங்கள் செய்யும் வேலையின் தன்மை மற்றும் அதன் சாதனைகள் தான் முக்கியம். இம்முறையில் உங்களின் உழைப்பின் பயனை அடைய சிறிது காலம் ஆகலாம், ஏன் அடைய முடியாமலும் போகலாம், ஒரு தொழிலில் எப்படி லாபம் நஷ்டம் சகஜமோ அதை போலவே ஆன்லைன் பிஸினஸிலும். ஆனால் இதில் நஷ்டம் என்பது பெரும்பாலும் நீங்கள் அதற்கு செலவு செய்த நேரமாக இருக்கலாம். ஆனால் இம்முறையில் சாதிக்கும் பட்சத்தில், நீங்கள் தூங்கும் போதும், இத்தொழில் உங்களுக்காக பணமீட்டி கொண்டிருக்கும் என்பதையும் சொல்லவிரும்புகிறேன்.
உதாரணத்திற்க்கு சொல்லவேண்டுமென்றால்,
ஒருவர் ஒரு நிறுவனத்திடமிருந்தோ அல்லது தனி நபர் ஒருவருக்கோ இணையத்தில் அவர்களுக்கு தேவையான வேலையை செய்து கொடுத்து அதன் மூலம் சாம்பதிக்கலாம் இதனை ஆன்லைன் வேலை என்கிறோம். இதில் செய்யும் வேலையின் கால அளவு அல்லது வேலையின் அளவை பொருத்து உங்களுக்கான வருமானம் இருக்கும்.


ஒருவர் ஒரு இணையதளத்தை அமைத்து அதனை பிரபலப்படுத்தி, அதில் விளம்பரங்களை பெற்று அதன் மூலம் சம்பாதிக்கலாம். இதில் விளம்பர வருமானம் பெற இணையதளத்தை அமைக்கவேண்டும், அதை பிரபல படுத்த வேண்டும், விளம்பரத்தை பெற வேண்டும், இவை அனைத்தும் செய்து வருமானம் பெறுவதால் இதை ஆன்லைன் பிஸினஸ் எனலாம்.
ஆன்லைன் வேலை மற்றும் தொழிலை இப்படியும் சொல்லலாம். அதாவது, தேவைக்களுக்கு (requirement) ஏற்ப வேலை செய்து தருவதை ஆன்லைன் வேலைகள் எனவும், வேலையை செய்துவிட்டு அதனை கொண்டு பணம் சம்பாதிக்கும் முறையை ஆன்லைன் பிஸினஸ் எனவும் கூறலாம்.
இவ்விரண்டு முறையிலும் பல்வேறு வகையில் பணமீட்ட வழிகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக இந்த வலைத்தளத்தில் தொடர்ந்து எழுதவுள்ளேன். ஓவ்வொரு பணமீட்டும் வழி பற்றி எழுதும் பொழுதும் இந்த பதிவில் கீழேயுள்ள பட்டியலில் இணைக்கப்படும். 

Comments

Popular posts from this blog

Who celebrate birthday party with cake you should study and watch the video

18 ways to earn money in online with android mobile

A Stating businesses and it's necessary