ஆரோக்யமான நொருக்கு தீணி அடிக்கடி சாப்பிடாதீங்க........
அனைத்து வயதினரும் உட்கொள்ளும் வகையிலான ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகள் குறித்து இங்கு காண்போம்.
பொதுவாக நொறுக்குத் தீனிகள் உடல்நலத்திற்கு ஊறு தரும் என்கிற கருத்து நிலவுகிறது. ஆனால், ஆரோக்கியமான நொறுக்குத் தீனியை வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம்.
இவற்றால் எந்த வித விளைவு ஏற்படாது. எனினும், அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளாமல் தேவைக்கு மட்டுமே சாப்பிட வேண்டும்.
கப்பை, மரவள்ளிக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளில் புரதம் மற்றும் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன. இவை அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஆரோக்கியமான நொறுக்குத் தீனி ஆகும்.
இதேபோல், புரூட்சாலட், வெஜ்சாலட் ஆகியவற்றில் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். அத்துடன் ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடை ஆகியவற்றையும் கட்டுப்படும்.
பேக்கரி வகை நொறுக்குத் தீனிகளை தவிர்க்க இன்றைய சூழலில் முடியாது. எனவே, வாரத்துக்கு 2 நாட்கள் பப்ஸ், கேக் போன்றவற்றை சாப்பிடலாம்.
ஏனைய நாட்களில் அவித்த பயறுகள், பழங்கள், சாலடுகள், வேர்க்கடலை, கிழங்கு வகைகள், பாதாம், முந்திரி, உலர்திராட்சை மற்றும் பேரிச்சைப்பழம் என ஒரு நாளைக்கு ஒன்றாக எடுத்துக் கொள்ளலாம்.
சாண்ட்விச்-ஐ சாப்பிட விரும்பினாலும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. போத்தல் குளிர்பானங்களை தவிர்த்து இளநீர், மோர், கூழ், காய்கறி சூப், அருகம்புல், வாழைத்தண்டு ஜூஸ் மற்றும் Fresh ஜூஸ் ஆகியவற்றை சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் பெறும்.
Comments
Post a Comment